ஜோதிடத்தில் கிரகங்களும், நட்சத்திரங்களும் ராசி மண்டலமும் இணைந்து வழங்கும் பலன்கள் ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் அவர்களுக்குரிய பலன்களாக அமைகிறது.

Advertisment

அப்படிப் பார்க்கும்பொழுது லக்னம், லக்னாதிபதி, ராசி, ராசியாதிபதி, நட்சத்திரம், நட்சத்திராதிபதி இவர்களின் நிலையைப் பொருத்துதான் ஒரு ஜோதிட ரால் பலன்களைக் காணமுடிகிறது.

ஒவ்வொரு தனிப்பட்ட ஜாதகத்திலும் எல்லாருக்கும் எல்லா வகையான அம்சங்களும் கிடைக்கப் பெறுவதில்லை. சில ஜாதகங்களில் மட்டுமே அந்த நிலை அமையப்பெற்றுள்ளது. அப்படி அமையப்பெற்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் வேண்டியவற்றைப் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளாமலேயே அடைந்துவிடுகின்றார் கள். சிலர் உழைத்தும், களைத்தும், மிகப்பெரிய அளவுக்கு முயற்சிகள் மேற்கொண்டுமே சிலவற்றை அடைகிறார்கள்.

27

ஒருசிலர் என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களின் செயல்கள் நடப்பதில்லை.

Advertisment

இதற்கு என்னதான் காரணம்? இதற்கு நம் ஜோதிட சாஸ்திரத்தில் ஏதாவது வழிகள் உண்டா என்று பார்க்கும்பொழுது நம் சாஸ்திரங்கள் பல வழிகளை நமக்கு வழங்கியுள்ளது. அதில் ஒன்றுதான் நட்சத்திரங்களின் விருட்சமென்று கூறுவது.

விருட்சமென்றால் மரம் என்று நம் அனைவருக்குமே தெரியும். 27 நட்சத்திரங்களுக்கும் 27 வகையான மரங்களை நமது சாஸ்திரம் கூறியுள்ளது. அவற்றின் துணையைக்கொண்டு நமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள ஜோதிட சாஸ்திரம் வழிகாட்டுகிறது.

எப்படியென்றால், ஒவ்வொரு ஜாதகத்தின் 11-ஆமதிபதி நின்ற நட்சத்திரத்திற்கு உண்டான மரத்தினை வளர்க்கும் பொழுதும், அவற்றைப் பராமரிக்கும்பொழுதும் 11-ஆமிடமான லாபஸ்தானம் பலம்பெற்று அதன்வழியாக நிலையான சொத்து சேர்க்கை உண்டாகும். மேலும் இரண்டாம் பாவகாதிபதி நின்ற நட்சத்திரத்திற்கான மரத்தை வளர்ப்பது மற்றும் பராமரிப்பதின்மூலம் நிலையான வருமானம் மற்றும் தன வரவிற்குரிய நிலையை நம்மால் அடையமுடியும்.

Advertisment

இந்த இடத்தில் ஒரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால், நமக்கு நடக்கும் தசாபுக்தியின் நாதர்கள் ஏறிய நட்சத்திரங்களுக்குரிய மரங்கள் நம் கண்ணில் அடிக்கடி தென்படும். அப்போது அதன்மீது நமக்கொரு ஈர்ப்பும் உருவாகும்.

இதற்கெல்லாம் காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்க்கும்பொழுது, "உன்னை வழிநடத்தும் நட்சத்திரத்தின் விருட்சம் நான்...' என்று அந்த விருட்சங்கள் கூறாமல் கூறுகின்றன என்று பொருள்.

அது மட்டுமல்ல; ஒவ்வொருவரின் ஜென்ம நட்சத்திரத்திற்கும் 18-ஆவது நட்சத்திரம் பணபர நட்சத்திரமாகும். அப்படியென்றால், ஒருவர் பிறந்த நட்சத்திரத்திலிருந்து எண்ணி வருகின்ற 18-ஆவது நட்சத்திரத்திற்குரிய விருட்சமாகும்.

நம்முடைய நட்சத்திரத்திற்கு 18-ஆவது நட்சத்திரத்திற்குரிய விருட்சத்தை நாம் கையாளும்போது பணம் சம்பந்தப்பட்ட சங்கடங்களில் நாமாகவே சிக்கிக்கொள்கிறோம்.

அதேபோல் ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 22-ஆவது நட்சத்திரமும் நமக்கு நன்மையளிக்காது.

உதாரணமாக, விருச்சிக லக்னத்திற்கு 8 மற்றும் 11-ஆமதிபதி புதன் ஆவார். இவர் ஆயில்ய நட்சத்திரத்தில் நின்று தசை நடத்தும்போது புங்க மரம் நட்டால் அல்லது அதனருகில் அடிக்கடி சென்றுவரும் சூழ்நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு எட்டாமிடத்தின் பலன் தொடங்கிவிடும்.

எதற்கெல்லாம் 8 உரியது என்று பார்க்கும்போது, வம்புசண்டை, வழக்கு, சட்டம் சம்பந்தப்பட்ட தொந்தரவுகளுக்கு ஆளாகும் நிலை ஏற்படும். இதிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கு அதன் விருட்சம் பாதுகாப்பு அரணாகிவிடும்.

27 நட்சத்திரங்களுக்கு மரங்கள் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

அஸ்வினி- எட்டி மரம்

பரணி- நெல்லி மரம்

கிருத்திகை- அத்தி மரம்

ரோகிணி- நாவல் மரம்

மிருகசீரிடம்- கருங்காலி மரம்

திருவாதிரை- செங்கருங்காலி

புனர்பூசம்- கொய்யா

பூசம்- அரசமரம்

ஆயில்யம்- புன்னை மரம்

மகம்- ஆலமரம்

பூரம்- பலாமரம்

உத்திரம்- அலரி

அஸ்தம்- வேலம்

சித்திரை- வில்வம்

சுவாதி- மருதம்

விசாகம்- விளாமரம்

அனுஷம்- மகிழ மரம்

கேட்டை- பிராயி

மூலம்- மாமரம்

பூராடம்- வஞ்சி மரம்

உத்திராடம்- பலாசு

திருவோணம்- எருக்கஞ்செடி

அவிட்டம்- வன்னி

சதயம்- கடம்பு

பூரட்டாதி- மாமரம்

உத்திரட்டாதி- வேம்பு

ரேவதி- இலுப்பை மரம்

சென்னை, ஆவடியிலுள்ள வீராபுரம் முருகன் கோவிலில் இந்த 27 நட்சத்திரங்களுக்கான மரங்களும் நட்டு பராமரிக்கப்படுகிறது. இதுபோல் இன்னும் பல இடங்களிலும் நட்சத்திர மரங்கள் பராமரிக்கப்படுகின்றன.

தங்களுக்கு நன்மைகளை வழங்கிடக்கூடிய விருட்சத்தை வளர்க்க முடியாதவர்கள், அதற்கென்று தன்னால் இயன்றவற்றை செய்ய இயலாதவர்கள் அதற் குரிய கோவிலை அணுகி, அங்கே தங்கள் நட்சத்திரத் திற்குரிய விருட்சத்திற்கு நீரூற்றிப் பராமரித்துவந்தால் நினைத்ததை அடையும் நிலையை அந்த விருட்சங்கள் வழங்கும்.

செல்: 80563 79988